Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

இந்த 6 ராசிக்காரர்களுக்கு ரிக்ஸ் எடுப்பது எப்போதும் ரஸ்க் சாப்பிடுற மாதிரி தான். உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த 6 ராசிக்காரர்களுக்கு ரிக்ஸ் எடுப்பது எப்போதும் ரஸ்க் சாப்பிடுற மாதிரி தான். உங்க ராசியும் இதுல இருக்கா?

வாழ்வில் ஆபத்தான முடிவுகளை எடுப்பது ஒன்றும் குழந்தைகள் விளையாட்டு போல் அல்ல. ஏனென்றால், நீங்கள் எடுக்கும் முடிவுகளின் பலனை உடனே நீங்கள் அனுபவித்தாக வேண்டும். ஒரு தவறான முடிவு ஒருவரின் வாழ்வையே தலைகீழாக மாற்றிவிடும். எப்படியிருந்தால், ஒருவர் தன் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் சற்று இக்காட்டான சூழலில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதுண்டு. அது மாதிரியான சந்தர்பங்களை யாராலும் தவிர்க்கவே முடியாது. ஆபத்தான முடிவு என்பது எந்த ரூபத்திலும் எந்த அளவிலும் இருக்கலாம். யாரும் சமைக்காத உணவை சமைக்க முயற்சிப்பது, காலை நேர காபியைத் தவிர்ப்பது அல்லது வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் முதலாக போட்டு புதிய தொழில் தொடங்குவது அல்லது யாரும் தெரியாத புது ஊருக்கு இடம் பெயர்வது என அனைத்துமே வாழ்வின் ஒரு வித கஷ்டமான, தைரியம் நிறைந்த முடிவுகள் தான். என்ன தான் நடந்துவிட போகிறது, பார்த்து விடவோம் என்கிற தைரியம் சிலருக்கு அதிகம். அதுவே சிலர் வாடிக்கையாகவும் கொண்டிருப்பர்.

சில நேரங்களில் மக்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் சில அபாயங்களை எதிர்க்கொள்கிறார்கள். எனவே, எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்பும் அதன் பின்விளைவு என்ன, அதனால் என்னென்ன நிகழ வாய்ப்புகள் உள்ளன என்பதை நன்கு ஆராய்ந்து முடிவு எடுப்பர். மறுபுறம், சிலர் அபாயகரமான முடிவுகளின் பலன்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், விஷயங்களில் குதிக்கின்றனர். சரி இப்போது எந்தெந்த ராசிக்காரர்கள் வாழ்வில் ஆபத்தாக முடிவுகளை மிகவும் சாதாரணமாக எடுக்கும் குணமுடையவர்கள் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

மிதுனம்

சரியாக முடிவெடுக்க முடியாத தன்மையால், மிதுன ராசிக்காரர்கள் முடிவெடுக்க வேண்டிய சூழல்களின் போது மிகவும் சிரமப்படுவார்கள். ஒன்றை தவறவிடுவதற்கு பயந்து, இவர்கள் அவசர அவசரமாக மிகவும் ஆபத்தான முடிவுகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுப்பார்கள். எதையும் யோசிக்காமல் அவசரமாக முடிவு எடுப்பது இவர்களின் சுபாவங்களில் ஒன்று. தற்போதைய வேலை பிடிக்கவில்லை அல்லது தங்கியிருக்கும் வீடு பிடிக்கவில்லை என்றால் எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனடியாக அதனை மாற்றி விடுவர். அவர்களின் இரட்டை ஆளுமை காரணமாக, மிதுன ராசி ஆண்களும் பெண்களும் ஒரே மனநிலையில் நிலையாக இருப்பதில்லை. அதன் காரணமாக இந்த நிமிடம் விரும்பி ஒன்று, அடுத்த நிமிடமே பிடிக்காததாக மாறிவிடும். மிதுன ராசிக்காரர்கள் வாயு பகவானைக் கொண்டிருப்பதாலோ என்னவோ, தங்கள் மனதை உடனுக்குடன் மாற்றி கொள்வதோடு, ஆபத்தான முடிவுகளையும் சிறிதும் யோசிக்காமல் எடுப்பர்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் ஒரு குழுவிற்கு தலைவராக இருக்கும் தகுதியுடையவர்கள். பெரும்பாலான, குழுக்களின் தலைவர்கள் சிம்ம ராசிக்காரர்களாக தான இருப்பர். அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் செய்யும் அனைத்தும் பிரம்மாண்டமாகவும், நம்பமுடியாததாவும் இருக்கும். அவர்கள் விரும்புவதைப் பெறுவதற்கும், தேவைப்பட்டால் எத்தகைய ஆபத்தான பாதையையும் தேர்ந்தெடுப்பதற்கும் ஆற்றலுடையவர்கள். இதன் காரணமாக, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் வியக்கத்தக்க மாற்றங்களைச் செய்து முன்னேறி செல்வார்கள். மேலும், அவர்கள் மற்றவர்களுக்காக தேவையற்ற அபாயங்களிலும் சிக்க கொள்ள நேரிடும். சிம்ம ராசி ஆண்களும் பெண்களும் மிகவும் துணிச்சலானவர்களாக இருப்பர். ஆபத்தான விளையாட்டுகளாக பஞ்ஜி ஜம்பிங் அல்லது ராக் க்ளைம்பிங் போன்ற செயல்களில் ஈடுபடுவதை பெரிதும் விரும்புவார்கள். இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது, 12 ராசிகளுடன் ஒப்பிடுகையில் சிம்மம் மிகவும் ஆபத்தான முடிவெடுக்கும் ராசிகளில் ஒன்றாக விளங்குகிறது.

விருச்சிகம்

ஆபத்தான முடிவெடுக்கும் போது, ​விருச்சிக ராசிக்காரர்கள் எதற்கும் பயப்படுவதில்லை. பாதுகாப்பான முடிவெடுப்பது மற்றும் குறைந்தபட்சம் ஆபத்தை மட்டும் தேர்ந்தெடுப்பது போன்றவை அவர்களின் அகராதியிலேயே கிடையாது. ஒவ்வொரு ஆபத்தையும் எதிர்கொள்வது மதிப்புக்குரியது என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும், பெரிய ஆபத்தை எதிர்கொள்ளும் போது அதனால் சிறந்த விளைவே கிடைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் ஒன்றை செய்கிறார்கள் என்றால் வேறு யாரும் அதை செய்திருக்க கூடாது, வித்தியாசமாக செய்யவே விரும்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வை உற்சாகத்துடன் வாழ விரும்புவார்கள். பிறர் செய்திராத புதிய விஷயங்கள், ஆபத்தான என்றும் தெரிந்தாலும் கூட அதை விரும்பி செய்வார்கள். மேலும், விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கை என்பது ஒரு முறை மட்டுமே என்பதே நன்கு புரிந்து கொண்டவர்கள் என்பதால், சுகமும் சாகசமும் இல்லாமல் வாழ்வது வீண் என்று எண்ணுபவர்கள். இதனால், ஜோதிட சாஸ்திரத்தில் அதிக ஆபத்தான முடிவுகளை எடுக்கும் ராசிகளின் பட்டியலில் இவர்களும் இடம்பிடித்துள்ளனர்.

தனுசு

மிகவும் ஊர் சுற்ற விரும்பும் ராசிகளில் ஒன்றான தனுசு, அனுபவம் மற்றும் சாகசத்தைப் பெரிதும் விரும்புபவர்கள். தனுசு ராசிக்காரர்கள் எல்லோரை போலவும் சுலபமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். ஏதாவது ஒன்றைப் பணயம் வைக்காமல் சாதிக்கும் எதுவும் அவர்களுக்கு திருப்தியைத் தராது. இந்த ராசிக்காரர்கள் எல்லையற்ற சாகசத்தை விரும்புபவர்கள். எனவே, அவர்கள் பாதுகாப்பான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதை விட ஆபத்தானதையே தேர்ந்தெடுப்பர். மேலும், தனுசு ராசிக்காரர்கள் ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலும், ஏதாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்கள் சமூக நெறிமுறைகளிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டதால், அவர்கள் இழக்க எதுவும் இல்லை என்று நம்புபவர்கள். அவர்களின் திறமையை கண்டுகொள்ள தங்களிடம் இருக்கும் அனைத்தையும் இழப்பதற்கும் தயங்க மாட்டார்கள். நெருப்புடன் விளையாடுவது அவர்களுக்கு மிகவும் விருப்பமானது. எனவே, தனுசு ராசியும் ஆபத்தான முடிவு எடுக்கும் ராசிகளில் ஒன்றாக உள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்கள் பயப்படக்கூடிய விஷயங்களைச் செய்வதில் சிறிதும் வெட்கப்படுவதில்லை. பிறர் அவர்களை அநியாயமாக நடத்துவதை இந்த ராசிக்காரர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். மேலும், இவர்கள் மீது மற்றவர்களை ஆதிக்கம் செலுத்தவும் விடுவதில்லை. தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க, எந்தச் சூழலிலும், குரல் கொடுப்பார்கள். இதுமட்டுமின்றி, இவர்கள் மிகவும் பெரிய ஆபத்தான முடிவெடுக்கவும் தயங்குவதில்லை. இவர்கள் தனிமனிதத்துவத்தை நம்புவதோடு, சமூகம் அல்லது அதன் கட்டமைப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களின் பணி வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும். மேலும், அவர்களை ஒற்றை கூட்டுக்குள் அடைக்க முடியாது. இவர்கள் கிளர்ச்சியாளர் என்பதால், அரிதாகவே ஒருவரைப் பின்தொடர்வார்கள். மேலும், இவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவதால், அவர்களை யாராலும் கட்டிப்போட முடியாது. கும்ப ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களின் ஆர்வத்தை திருப்திப்படுத்த ஆபத்து முடிவுகளை எடுக்கவும் தயாராக இருப்பர். எனவே, அவர்கள் மாற்றத்தை விரும்புபவராகவும், ஒவ்வொரு அற்புதமான வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்க விரும்புகிறார்கள். முற்றிலும் ஆபத்தை மட்டும் விரும்பும் ராசிக்காரர்களில் கும்ப ராசியும் உண்டு.

மீனம்

மீனத்தை அன்பான மற்றும் பணிவான ராசிக்காரர்கள் என்று நினைத்தாலும், அவர்களின் தைரியம், அபாயகரமான முடிவுகளை எடுப்பதைக் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். சந்தேகத்திற்கு இடமின்றி அவர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள அனைவரின் வலியையும் உணருபவர்கள். இருந்தாலும், அது அவர்களின் ஆளுமை திறன் மற்றும் குணாதிசயத்தை பற்றியது அல்ல. உண்மையில், மீன ராசிக்காரர்களை ஒரே குணாதிசயத்தின் கீழ் அடக்கி விட முடியாது. ஏனெனில், யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவர்களின் நடத்தை இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் சுயகட்டுப்பாடு கொண்டவர்கள். அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் அபரிமிதமான நம்பிக்கை கொண்டவர்கள். இவையனைத்தும் அவர்களை ஆபத்தை எதிர்கொள்ளும் ராசிக்காரர்களாக ஆக்குகின்றன. மேலும், அவர்கள் ஒரு முடிவை எடுத்தவுடன், அது எவ்வளவு ஆபத்தான முடிவை எடுத்தாலும் துணிந்து எதிர்கொள்வார்கள். இவர்கள் பல விஷயங்களில் தலைசிறந்தவர்களாக இருப்பதால், இவர்களின் நம்பிக்கையை குறைக்க முயற்சிக்கும் எவருக்கும் இசைந்து கொடுக்காது. கூடுதலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய தேவையான அனைத்தையும் அவர்களே செய்து கொள்வார்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →